காபி தமிழிலில் கொட்டை வடிநீர் அல்லது குழம்பி என்ற பெயர்களால் அழைக்கப்படுகிறது.
சர்வதேச காபி தினம் அக்டோபர் 1 அன்று கொண்டாட படுகிறது. காபி பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்களை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
வரலாறு
காபி 15 வது நூற்றாண்டில் இருந்தே இருந்து வருகிறது.ஏமன் நாடுகளில் பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.அதன் பின்னர் 16 வது நூற்றாண்டில் இந்தியா, துருக்கி, வட ஆப்பிரிக்கா, இத்தாலி போன்ற நாடுகளுக்கு பரவ தொடங்கியது. தற்போது உலகம் முழுவதும் அனைவரும் விரும்பி அருந்தும் ஒரு பானமாக உள்ளது.
காபி குடிப்பது உடலுக்கு நன்மையா? தீமையா? என்பதை பற்றி தொடர்ந்து காண்போம்.
நன்மைகள்
தொப்பையை குறைய:
தினமும் காபி அறுந்துவதால் தொப்பை குறையும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.3 முதல் 11% வரை தொப்பை குறையும்.உடற்பயிற்சி செய்வதற்கு முன்பாக உடல் உற்சாகத்திற்கு காபியை அறுந்துகின்றனர்.
புற்றுநோய் வராமல் இருக்க:
காபி பருகுவதால் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு குறைவு என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
குறிப்பாக வாய் புற்றுநோய் மற்றும் தோல் புற்றுநோய் வாராமல் தடுப்பதில் காபி முக்கிய பங்கு வகிப்பதாக கூறப்படுகிறது.
மூளை புத்துணர்ச்சி பெற:
காபி அறுந்துவதால் மூளை சுறுசுறுப்பாகவும் புத்துணர்ச்சியுடனும் வேலை செய்கிறது.
நீரிழிவு நோய் வராமல் தடுக்க:
மெலிடஸ் என்று கூறப்படும் நீரிழிவு நோய் இரண்டாவது வகை நோய் வராமல் தடுப்பதில் காபி முக்கிய பங்கு வகிக்கிறது.
மெலிடஸ் என்பது இன்சுலின் சாராத நீரிழிவு நோய் ஆகும். இன்சுலின் பற்றாக்குறையால் ஏற்படுகிறது .காபி அருந்துவதன் மூலம் 38% முதல் 46% வரை இந்த நோய் வராமல் தடுக்க படுவதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றனர்.
வைட்டமின்கள் உள்ளன:
காபி பருகுவது உடல் நலத்திற்கு நல்லது என்று கூறப்படுகிறது. இதில் விட்டமின் B உள்ளது .அது மட்டுமன்றி உடலிற்கு தேவைப்படும் மங்கனீசு மற்றும் பொட்டாசியம் சத்துகளும் காபி அருந்துவதன் மூலம் பெறலாம்.
ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ்:
ஆக்ஸிஜனேற்றம்,முதுமை போன்றவையில் காபி முக்கிய பங்கு வகிக்கிறது.
மன அழுத்தம் குறைய:
மன அழுத்தம் மற்றும் மன சீரிழவு போன்ற மனது சம்பந்தமான நோய்களில் இருந்து பாதுகாப்பதற்கு காபி அருந்துவது முக்கிய தீர்வாக பார்க்கப்படுகிறது.
பித்தப்பை கற்கள் வராமல் தடுக்க:
உலகின் புகழ் பெற்ற பல்கலைக் கழகமான ஹார்வர்டு பல்கலைக் கழகம் நடத்திய ஆராய்ச்சியில் காபி அருந்துவதன் மூலம் 40% வரை பித்தப்பை கற்கள் வராமல் பாதுகாக்க படுகிறது என்று தெரிவித்துள்ளனர்.
பக்கவாதத்திலுருந்து பாதுகாத்துக்கொள்ள:
நாள் ஒன்றுக்கு 2 முதல் 3 கப் காபி அருந்துவதன் மூலம் பக்கவாதம் வரும் வாய்ப்பு குறைவாக உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
எதுவாயினும் நன்மைகள் இருந்தாலும் அதனால் ஏற்படும் தீமைகளும் உண்டு.காபி அருந்துவதால் ஏற்படும் ஒரு சில தீமைகளை இப்போது பார்ப்போம்.
தீமைகள்:
அடிமைப்படுத்துதல்:
காபி அருந்துவதால் அதன் சுவையானது மீண்டும் மீண்டும் அருந்துவதற்கு தூண்டுகிறது.இதனால் காபிக்கு அடிமையாகி நிறைய நபர்கள் அவதிப் படுகிறார்கள்.அளவுக்கு அதிகமாக பருகுவதால் உடல் நலத்தில் பலவேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள்:
குழந்தைகள் அளவுக்கு அதிகமாக காபி பருகுவதன் விளைவாக தூக்கத்தில் சிறுநீர் வெளியேறுதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.
வயிறு உபாதைகள்:
சீரற்ற அளவினால் காபி பருகுவதன் விளைவாக வயிற்றில் வலி மற்றும் பல்வேறு வகையான வயிறு உபாதைகள் ஏற்படுகிறது.
இரத்த கொதிப்பை அதிகரிக்கிறது:
அதிகளவில் ஆன காபி உடலில் உயர் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.
தலைவலி:
தொடர்ந்து அதிக அளவில் காபி அருந்துவதால் தொடர் தலைவலி ஏற்படுகிறது.
மயக்கம்:
காபி அடிக்கடி அருந்தி அடிமையாவதன் விளைவாக மயக்கம் போன்ற உணர்வுகள் அடிக்கடி ஏற்படும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
எந்த வகையான உணவு பொருளாயினும் அளவுக்கு அதிகமாக உட்கொள்வதால் ஆபத்து ஏற்படும் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்று தான்.
அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு.
எந்த உணவாயினும் தேவைக்கு ஏற்பவும் தேவையின் அளவுக்கு ஏற்பவும் உண்டு வந்தால் எல்லா நலமும் பெற்று மகிழ்ச்சியாக வாழலாம்.