காபி நம் அனைவர் வாழ்விலும் தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்து வருகிறது. ஒரு நாளைக்கு 2 முதல் 3 கோப்பை வரை காபி நாம் பருகலாம். ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 1 ஆம் தேதி சர்வதேச காபி தினம் கொண்டாட படுகிறது.
நாம் பெரும்பாலும் இன்ஸ்டன்ட் காபி வீட்டில் குடிபதோடு சரி, ஆனால் உலகம் முழுவதும் பல்வறு வகையான காபி வகைகள் உள்ளது. இதில் அதை பற்றிய விவரங்களை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
காபி வகைகள்
- பில்டர் காபி
- எஸ்பிரசோ
- கேப்பச்சினோ
- லாட்டோ
- மச்சியாட்டோ
- ஐரிஷ்
- காபின் நீக்கப்படது
- இன்ஸ்டன்ட் காபி
மேலே உள்ள வகைகள் பற்றி விரிவாக இனிமேல் காண்போம்.
பில்டர் காபி
பில்டர் காபி தமிழகத்தில் மிகவும் பிரபலமான ஒரு வகையாகும். இதன் சுவைக்கு மயங்காத ஆட்களே இருக்க முடியாது. 85% காபி மறறும் 15% சிக்கரி கலந்து அரைத்து அதை கொண்டு காபி தயாரிக்கப்படும். சிக்கரி கலக்காமலும் காபி போடலாம், ஆனால் ஒரு முறை மட்டுமே அப்படி பொட முடியும். இதுவே சிக்கரி கலந்து செய்தால் 2,3 முறை காபி தயாரிக்கலாம்.
எஸ்பிரசோ
மெஷின் கொண்டு அரைக்கப்பட்டு தயாரிக்க படுகிறது. நீர் அல்லது நீராவி கொண்டு காபி கொட்டைகள் அறைக்கபட்டு தயாரிக்க படுகிறது. அதனால் தான் இது மிகவும் அடர்த்தியாக உள்ளது. காபின் அளவு மற்றதை விட இதில் அதிக அளவில் கலக்க படுகிறது.
கேப்பசினோ
காபி தூளை மெஷின் அல்லது கைகளால் நன்கு கலந்து பின்பு அதன் உடன் பால் சேர்த்து தயாரிக்க படுகிறது. இது மிகவும் ருசியான ஒன்றாக தோன்றுகன்றது.
லாட்டா
திக்கான பாலில் காபி பொடி கலந்து காபி தயாரித்து அதன் மேல் வாடிக்கையாளர் விருப்பத்திற்கு ஏற்றவாரு டிசைன்கள் பால் அல்லது காபி டிக்கசன் கலந்து உருவாக்க படுகிறது.
மச்சியாட்டோ
இத்தாலியில மச்சியட்டோ என்ற சொல்லின் அர்த்தம் spotted. காபி தயாரித்து அதன் பின்னர் காபியின் மேல் காபி பொடி அல்லது தீக்கான பால் மேலே இருக்கும்படி அலங்கரிப்பது தான் மச்சியாட்டோ என்று அழைக்கப் படுகின்றது.
ஐரிஸ்
காபின் கலந்த ஆல்கஹலிக் பானம் தான் ஐரிஸ் என்று அழைக்க படுகிறது. விஸ்கி மேல ஹாட் காபி மற்றும் சர்க்கரை சேர்த்து தயாரிக்க படும் ஒரு விதமான போதை பானம் தான் ஐரிஸ் என்று அழைக்க படுகிறது.
காபின் நீக்கப்பட்ட காபி
இந்த வகை காபியில் காபின் நீக்க பட்டு காபி தயாரிக்கப்படுகிறது. இதில் 97% முதல் 99.9% காபின் நீக்கப் படுகிறது. இது நன்மை நிறைந்த ஒன்றாக கருத்படுகின்றது. இதனை அருந்துவதால் புற்றுநோயிலிருந்து பாதுகாத் த்து கொள்ளலாம் என்று கூற படுகிறது.
இன்ஸ்டன்ட்
வருத்த காபி கொட்டையிலிருந்து காபி பொடி தயாரித்து அதில் இருந்து மிகவும் எளிதாக காபி தயாரிக்கும் வகையில் உருவாக்க படுகிறது. பால் மற்றும் சுடு தண்ணீர் சேர்த்து உடனடியாக தயாரித்து கொள்ளலாம்.
நாம் அறியாத இன்னும் பல்வேறு விதமான காபி வகைகள் உலகம் முழுவதும் உள்ளது. வாய்ப்பு கிடைத்தால் பல்வேறு வகையான காபி வகைகளை அருந்தி ஆனந்தமாய் இருங்கள்.