Brain Hacks in Tamil

மூளை நம் உடலின் மிக முக்கியமான அங்கமாகும். அதனை நாம் சரியாக தான் பயன் படுத்தி கொள்கிறோமா? அதனை முறையாக பராமரித்து வருகிறோமா? இந்த கேள்விகளுக்கு நம் பலரின் பதில் இல்லை என்பது தான். இதயம் நமக்கு எவ்வளவு முகியோமோ அதே அளவிற்கு மூளை செயல்பாடும் முக்கியம். அதனை எவ்வாறு பராமரித்து கொள்ளலாம் என்பதை பற்றி தான் இந்த பதிவில் எழுத உள்ளேன். நீங்களும் அதனை தெரிந்து கொள்ள விரும்பினால் தொடர்ந்து இந்த பதிவை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

  • நீங்கள் படிப்பது எவ்வளவு முயற்சி செய்தாலும் மறந்து விடுகிறது என்றால், நான் கூறுவதை முயற்சி செய்து பாருங்கள். நீங்கள் படித்து முடித்ததும் உடனே 30 முதல் 60 நிமிடங்கள் வரை படுத்து தூங்கி விடுங்கள். பின்னர் எழுந்து படித்ததை நினைவு கூர்ந்து பாருங்கள், முன்பை விட அதிகமாக நீங்கள் படித்தது நினைவில் இருக்கும்.
  • எதாவது வாங்க போகும் போது அல்லது அவசரத்தில் முக்கியமாக நினைவு வைத்துக் கொள்ள வேண்டியதை மறந்து விடுவீர் என்றால் நியாபகம் வைத்து கொள்ள வேண்டிய சொல்லையோ அல்லது எண்களையோ வாய் விட்டு 10 முறை சொல்லி பாருங்கள் நிச்சயம் இனி அது எளிதில் மறக்காது.
  • போதுமான தூக்கம் மிக முக்கியமான ஒன்றாகும். ஒரு நாளைக்கு 7-8 மணி நேரம் தூக்கம் மிகவும் அவசியம். உறக்கமின்மை மூளை செயல் பாட்டை தடுக்கிறது.
  • குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும். குளிர்ந்த நீர் மூளை செயல் திறனை தூண்டுகிறது. வெந்நீர் கொண்டு குளிப்பதை விட குளிர்ந்த நீரில் குளிப்பதே உடலுக்கு நன்மை தரும் .
  • கொழுப்பு அதிகம் எடுத்துக் கொள்வது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ஆனால் நல்ல கொழுப்பு உடலுக்கு மிக முக்கியமான ஒன்றாகும். நல்ல கொழுப்பை தினமும் எடுத்து கொள்வது மூளைக்கு மிகவும் நல்லது.
  • தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதன் மூலமாக நம் உடலை மற்றும் மூளையை புத்துணர்ச்சியுடன் வைத்து இருக்க முடியும்.
  • ஒரு நாளைக்கு தேவையான அளவு காபி குடிப்பதால் நம் மூளையை புத்துணர்ச்சியுடன் வைத்து கொள்ள முடியும்.
  • தினமும் ஒரு மணி நேரம் நடப்பதால் மூளை செயல் பாட்டை அதிகரிக்க முடியும் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
  • நாம் எது சொன்னாலும் நம் மூளை அதனை நம்பும். எனவே தேவை இல்லாத தகவல்களை மூளைக்கு சொல்லாமல் எது உங்களுக்கு தேவையோ அதனை மட்டும் நினைக்க பழகுங்கள்.
  • நாம் எப்பொதும் ஒரு விஷயத்தை மறக்க வேண்டும் என்றால் மறக்க வெண்டும் என்று சொல்லி கொண்டே இருப்போம் அப்போது தான் அதனை நம் மூளை திரும்ப நினைவு படுத்தும். ஒன்றை மறக்க வெண்டும் என்று நினைத்தால் அதனை விட சிறந்த ஒன்றை பற்றி நினைக்க பழகுங்கள்.
  • நீங்கள் எப்போது கோவமாக அல்லது சோகமாக இருக்கிறீர்களோ அப்போது தொடர்ந்து அதையே சிந்திக்காமல் உங்களது மூச்சி விடும் முறையை அமைதியாக கவனியுங்கள், இவ்வாறு செய்வதால் உங்கள் மூளை அமைதியாக இருக்க உதவும்.
  • சிறந்த இசை கேட்பது மூளை செயல்பாட்டை அதிகரிக்கிறது.
  • ஒரு நாளை தொடங்கும்போது எப்பொதும் நீங்கள் எவ்வாறு வாழ்வில் உயர வேண்டும் எந்த நிலையில் இருக்க விரும்புகிறீர்கள் என்பதனை மனதில் காட்சியாக நினைத்து பார்த்து விட்டு அந்த நாளை தொடங்குங்கள்.
  • ஒரு நாளில் நீங்கள் எதை எதை செய்ய வெண்டும் என்பதை முன் கூட்டியே தெளிவாக நேரம் ஒதுக்கி விடுங்கள்.
  • உங்களது கவனத்தை அதிகரிக்க ஒரு நாளில் நீங்கள் செய்து முடிக்க வேண்டிய முக்கியமான ஒன்றை பேனா கொண்டு எழுதுங்கள் இவ்வாறு எழுதுவது உங்கள் மூளையில் பதிந்து அதனைச் சிறப்பாக செயல் பட வைக்கிறது
  • நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலிலும் உங்களது கவனத்தை அதிகரிக்க முயற்ச்சி செய்யுங்கள் இவ்வாறு செய்வதால் உங்கள் மூளை தேவையில்லாத விசயங்களை அதிகமாக ஈர்க்காது.
  • நீங்கள் கற்று கொள்வதை மற்றவர்களுக்கு சொல்லி தாருங்கள். இவ்வாறு செய்வதால் மூளை தான் கற்ற விஷயங்களை எளிதில் மறக்காது.
  • எதிர்மறை வார்த்தைகள் பேசுபவர் அல்லது எதிர்மறை எண்ணங்கள் கொண்ட ஒருவராக நீங்கள் இருந்தால், தயவு செய்து அதனை நிறுத்துங்கள்.நீங்கள் பேசுவதை தான் உங்கள் மூளை கேட்கும் இதனால் தான் எதிர்மறை எண்ணங்கள் உங்களை தொடர்ந்தது கஷ்ட படுத்துகிறது.
  • நீங்கள் தான் உங்கள் மூளைக்கு முதலாளி உங்கள் மூளை எதை சிந்திக்க வேண்டும் என்பதை நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும். எனவே முடிந்த வரை நல்ல எண்ணங்களாக சிந்தியுங்கள்.
  • நீங்கள் ஒரு பிரச்சினையை எதிர் கொண்டு இருக்கிறீர்கள் என்றால் அந்த பிரச்சினையின் முடிவில் என்ன ஆகும் என்பதை நேர்மறை முடிவாக சிந்தித்து பாருங்கள்.
  • விரைவாக படிக்க பழகுங்கள் இது உங்கள் மூளை செயல் பாட்டை அதிகரிக்க உதவுகிறது.
  • எதாவது தவறாக நடந்தால் அதையே நினைத்து கொண்டு இல்லாமல் அதில் இருந்து வெளியே வந்து நீங்கள் என்ன செய்ய வேண்டும் அவ்வாறு செய்தால் என்ன மகிழ்ச்சி கிடைக்கும் என்பதை சிந்தித்து பாருங்கள்.
  • தொலைபேசி நோட் பேடில் எல்லாவற்றையும் குறித்து வைக்காமல், பேனா கொண்டு காகிதத்தில் எழுதி பழகுங்கள் இது உடனே உங்கள் மூளையை சென்றடையும்.
  • மூளை எப்பொதும் புத்துணர்ச்சியுடன் இருக்க வேண்டும் என்று நினைத்தால் அடிக்கடி புதிய விஷயங்களை கற்று கொள்ளுங்கள், இது மூளை செயல் பாட்டை தூண்டுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *