Time hacks in tamil

இந்த உலகத்தில் மிக முக்கியமான ஒன்றும் அதிகமான அளவில் செலவழிக்கப்படும் விலை உயர்ந்த பொக்கிஷம் நேரம். உலகில் பெரும்பாலான விஷயங்கள் இழந்தால் மீட்டு விடலாம் ஆனால் இந்த நொடி கடந்து விட்டால் அதனை என்ன செய்தாலும் மீட்க முடியாது. இது நம் அனைவரும் அறிந்த ஒன்றே, ஆனாலும் தொடர்ந்து அதையே தான் செய்வோம். வாழ்க்கை என்பது கற்பனை படம் அல்ல கால இயந்திரம் கொண்டு சுழற்றி கடந்த காலத்திற்கு சென்று செய்த தவறுகளை திருத்துவதற்கும் , எதிர் காலத்திற்கு சென்று தவறுகள் செய்யாமல் தடுப்பதற்கும். இந்த நொடி மட்டுமே நிஜமான ஒன்று. இப்போது இருக்கும் நேரத்தை சரியாக பயன் படுத்தினால் எதிர்காலம் அழகாக அமையும் இது ஒன்று தான் வாழ்க்கைக்கான விதி. எனவே முடிந்த அளவிற்கு நேரத்தை சரியாக பயன் படுத்த பாருங்கள்.

உங்கள் நேரத்தை வீண் செலவு செய்கிறீர்கள் அல்லது நேரத்தை சரியாக பயன் படுத்த முடியாமல் அவதி படுகிறீர்கள் என்றால், நீங்கள் சரியாக பயன்படுத்த நான் சில தகவல்களை இந்த பதிவில் குறிப்பிடுகிறேன் தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

1)எது முக்கியம் என்பதை முடிவு செய்யுங்கள்.

ஆம் ஒரு நாளில் பல வேலைகள் உங்களுக்கு இருக்கும். உதாரணத்திற்கு நாளை உங்களுக்கு முக்கியமான தேர்வு அல்லது ஒரு நேர் காணல் ஒன்று இருக்கிறது. அதற்கு நீங்கள் உங்களை தயார் படுத்தி கொள்ள வேண்டும் இன்று என்பது உங்களுக்கு நிச்சயமாக தெரியும் . அதே நேரத்தில் இன்று உங்கள் நெருங்கிய நண்பர் ஒருவருக்கு பிறந்த நாள் என்று வைததுக்கொள்வோம், அவர் உங்களை வெளியே செல்வதற்கு அழைக்கிறார். இந்த நேரத்தில் உங்களுக்கு எது முக்கியம் என்று நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும். எந்த முடிவு வேண்டுமானாலும் எடுக்கலாம். நீங்கள் நண்பர் உடன் மகிழ்ச்சியாக வெளியில் செல்லலாம் சென்று விட்டு தேர்வுக்கு தயாரகமல் தேர்வில் தோல்வி அடையலாம் அல்லது நண்பர் உடன் செல்லாமல் படித்து தேர்வில் வெற்றி பெறலாம். எது உங்களுக்கு அவசியம் என்பதை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும். அவ்வாறு ஒன்றை தேர்வு செய்த பிறகு தவறென்று வருந்தாமல் நடப்பதை எதிர் கொள்ளுங்கள்.

2)உணவு , உறக்கம், உடற்பயிற்சி

உணவு , உறக்கம், உடற்பயிற்சி இதில் அக்கறையோடு தேவையான நேரத்தை இதில் செலவிட பாருங்கள், ஏனெனில் இவை மூன்றும் தான் உங்களது கவனத்தை அதிகரிக்க உதவுகிறது.

3) 2 நிமிட விதி

2 நிமிட விதியை பின்பற்றி பழகுங்கள். 2 நிமிடத்தில் செய்து முடிக்க கூடிய சிறிய வேலைகளை தள்ளி போடாமல் உடனே செய்து முடிக்க பாருங்கள்.

4) 5 நிமிட விதி

இரண்டு நிமிட விதியை போல தான் இதுவும். ஒரு வேலை 5 நிமிடத்தில் செய்து முடித்துவிடலாம் என்ற பட்சத்தில் எந்த காரணம் சொல்லியும் அதனை தள்ளி போடாமல் உடனே செய்து முடிக்க பழகுங்கள்.

5) தொடர்ந்து செய்து பாருங்கள்

புதிதாக எதோ ஒரு செயலை அல்லது ஒரு வேலையை செய்ய தொடங்கும் போது உடனே நீங்கள் செய்வதற்கான பலன் கிடைக்க வேண்டும் என்று எதிர் பார்க்காதீர்கள். தொடர்ந்து செய்து பழகுங்கள், அதிலும் நீங்கள் எதிர் பார்த்த பலன் கிடைக்காமல் இருக்கும் பொது தான் நீங்கள் நிறுத்தாமல் தொடர்ந்து செய்ய வேண்டும்.

6) சிறிய பழக்கங்கள்

நேர்மறையான சிறிய பழக்கங்களை தினமும் செய்ய பழக்க படுத்துங்கள் உங்களை. உதாரணத்திற்கு , உங்களை பற்றிய நல்ல விஷயங்களை நாட்குறிப்பில் எழுதுவது அல்லது உங்களிடம் உள்ள குறைகளை நாட்குறிப்பில் எழுதி அதிலிருந்து நீங்கள் உங்கள் மாற்றி கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி எழுதலாம் அல்லது எதாவது உங்கள் வாழ்வில் நல்ல மாற்றங்கள் இருந்தால் அதை எழுதலாம். தினமும் உங்களை பற்றி நீங்களே அறிந்து கொள்ள சிறிது நேரம் ஒதுக்கி பழகுங்கள்.

7) எழுதி பழகுங்கள்

நீங்கள் எவ்வளவு பெரிய அறிவாளியாக இருந்தாலும் நியாபக மறதி என்பது எல்லாருக்கும் பொதுவான ஒன்று நிறைய விஷயங்களை மறக்க நேரிடலாம். எனவே நீங்கள் என்ன செய்ய வேண்டும் அல்லாது நீங்கள் நினைத்தது என்னவெல்லாம் செய்து முடித்து உள்ளீர்கள் என எல்லாவற்றையுமே பேனா கொண்டு தினமும் எழுதி பழகுங்கள்.

8) போமொடோரோ முறை

போமொடொரோ முறை என்பது குறிப்பிட்ட நேரம் இடைவெளி ஒதுக்கி நாம் முடிக்க வேண்டிய வேலைகளை முடிப்பதற்காக பின்பற்ற படும் முறையாகும். இதனை பிரான்சிஸ்கோ கிரில்லோ என்பவர் 1980 களில் உருவாக்கினார்.

போமொடோரோ பின்பற்றும் முறை

  • நீங்கள் செய்து முடிக்க வேண்டிய வேலை எது என்பதை முடிவு செய்யுங்கள்.
  • உங்களது டைமர் – ல் 25 நிமிடம் என பதிவு செய்யுங்கள்.
  • இந்த 25 நிமிடம் எந்த கவனச் சிதறல் இன்றி அந்த வேலையை செய்து முடியுங்கள்.
  • நீங்கள் எடுத்த வேலையை செய்து முடித்த பிறகு 5 நிமிடம் இடைவெளி எடுத்து கொள்ளுங்கள்.

இவ்வாறு நீங்கள் தொடர்ந்து உங்கள் வேலைகளை 25 நிமிடம் என பிரித்து 5 நிமிட இடைவெளி எடுத்து கொண்டு செய்து முடிக்கலாம். ஒவ்வொரு நான்கு போமோடோரோ முடியும் போதும் நீங்கள் 15-30 நிமிட நீண்ட இடைவெளி எடுத்து கொள்ளலாம்.

9) எழுந்தவுடன் கைபேசியை தொடாதீர்கள்

காலை எழுந்ததும் கைபேசி எடுத்து சமூக வலை தளங்களில் நேரம் செலவிடுவதை நிறுத்துங்கள். காலை எழுந்த உடனே நீங்கள் உங்கள் கை பேசியில் நேரத்தை செலவிட தொடங்கினாள் நேரம் வீணாக அதிலே போய்விடும் அல்லது அதில் நீங்கள் பார்க்கும் எதோ ஒரு விஷயம் உங்கள் அமைதியான காலை நேரத்தை வீனாக்கிவிடலாம். பெரும்பாலும் நமது நாள் நாம் காலையில் எந்த அளவுக்கு நேர்மறையாக இருக்கிறோம் என்பதை பொறுத்தே அமைகிறது. எனவே காலை எழுந்ததும் கைப்பேசி உபயோக படுத்துவதை தவிர்க்க பாருங்கள்.

10) மிக முக்கியமான வேலை

ஒரு நாளில் நிறைய வேலைகள் நீங்கள் செய்து முடிக்க வேண்டி இருக்கும், அதில் மிக முக்கியமான அல்லது அவசியமான 3 வேலைகளை 1,2,3 என்று வரிசை படுத்தி வைத்து கொள்ளுங்கள். இது உங்களது சரியான வேலைகளை செய்து முடிக்க உதவும்.

11) செய்ய தொடங்குங்கள்

ஒரு வேலையை செய்ய சரியான நேரத்திற்கு காத்திருக்காமல் உடனே செய்ய தொடங்குங்கள். அது போல் கச்சிதமாக செய்து முடிக்க வேண்டும் என்று ஒரே வேளையில் அதிக நேரத்தைச் செலவு செய்யாதீரகள். உங்களது முழு முயற்சி கொண்டு அந்த வேலை செய்யுங்கள் இறுதியில் நன்றாக முடியும்.

12) தள்ளிப்போடுங்கள்

இவ்வளவு நேரம் நேரத்தை எவ்வாறு பயன் படுத்த வேண்டும் என்று கூறிவிட்டு இறுதியில் இந்த தலைப்பை பார்த்தால் கேலியாக இருக்கலாம். ஆம் நாம் எல்லாரும் எப்போதும் ஒரே மனநிலை அல்லது சூழ்நிலையில் இருப்பதை இல்லை, அது போன்ற சமயத்தில் உங்களை வருத்தி அந்த வேலையை செய்து முடிக்காமல் அந்த வேலையை தள்ளி போடுங்கள். ஆனால் நீங்கள் தள்ளி போடும் வேலையை எப்போது முடிக்க வேண்டும் என்பதை தெளிவாக வரிசை படுத்தி வைத்து அதனை அந்த நேரத்தில் சரியாக முடித்து விடுங்கள்.

மேலே கூறப்பட்டுள்ள தகவல்கள் உங்களக்கு எதோ ஒரு வகையில் உங்கள் நேரத்தை மிச்ச்படுத்தும் என்று நம்புகிறேன். மேலும் பல்வேறு தகவல்கள் படித்து தெரிந்து கொள்ள இந்த இணைய தளத்தின் மற்ற பதிவுகளை பாருங்கள்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *