இங்கு மனிதர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கு ஏற்ற தனித்துவ குணம் கொண்டவர்களாக இருக்கிறோம், இருப்பினும் பல்வேறு உளவியல் சிந்தனைகள், பழக்க வழக்கங்கள் அனைத்தும் பொதுவாக நாம் எல்லோரிடத்திலும் ஒன்றாக காணப்படுகின்றன. அவைகளில் சிலவற்றை இந்த பதிவில் எழுதி உள்ளேன் படித்து நீங்களும் இந்த பொதுவான உளவியல் சிந்தனைகள் மற்றும் செயல்கள் கொண்டவரா என்று தெரிந்து கொள்ளுங்கள்.
- ஒரு மனிதரை பார்த்ததும் பிடித்து விட்டது என்று பல்வேறு படத்தில் மற்றும் நாமுமே பல முறை சொல்லி கேட்டிருப்போம். யாரென்றே தெரியாத ஒருவரை பார்த்ததும் பிடிப்பதும் அல்ல அவர்கள் செயல்கள் கொண்டு ஈர்க்க படுவதும் சாத்தியமா என்று நாம் யோசித்தால் அதற்கான பதில் ஆம் சாத்தியம் தான். ஒரு நபரை பார்த்து அவர்கள் அழகு கொண்டோ அல்லது செயல்கள் கண்டோ ஈர்க்க பட வெறும் 2-4 நிமிடங்கள் போதும் என உளவியல் உண்மை சொல்கிறது. இதனை அடுத்த முறை நீங்கள் புதிதாக ஒரு நபரை பார்க்கும் போது நினைவு கூர்ந்து பாருங்கள்.
- நீங்கள் வேலை தேடி செல்லும்போது வேலை இல்லை என்று நிராகரித்தாலோ அல்லது நீங்கள் விரும்பும் நபர் உங்களை நிராகரித்தாலோ மூளையானது அந்த மன வலியை உடல் வலி போல் உங்களுக்கு உணர்த்தும் என்று உளவியலாளர் கூறுகிறார்கள். அதனால் தான் இது போன்ற நிராகரிப்புகளை எதிர் கொள்ளும் போது நமது மனம் மட்டும் அல்லாமல் உடலும் சோர்ந்து போய் எந்த வேலையும் செய்யாமல் சோர்ந்து போய் அப்படியே நாட்களை கடத்துகிறோம்.
- எப்போதாவது நீங்கள் கனவு காணும் போது யாரென்றே தெரியாத நபர்களை பார்த்ததுண்டா? யார் இவர்கள் யாரென்றே தெரியவில்லை ஆனாலும் நமது கனவில் வருகிறார்கள் என்று சிந்தனை செய்தது உண்டா? அப்படி என்னை போல் நீங்களும் யோசித்து பார்த்து இருக்கிறீரகளா அப்டி என்றால் அதற்கான பதில் அவர்கள் உங்களுக்கு முன் பின் தெரியாத நபர் அல்ல இதற்கு முன்பு வெளியில் எங்கோ சில நொடிகள் கடந்து போகயில் அவர்களை பார்த்து இருப்பீர்கள் அது உங்கள் மூளையில் ஆழமாக பதிந்து போய் இருக்கும் அந்த நபர்கள் தான் உங்கள் கனவில் தோன்றுகிறார்கள் என்று உளவியல் கூறுகிறது.
- எவர் ஒருவர் உங்களுக்கு சிறந்த அறிவுரைகளை கொடுத்து கொண்டு இருக்கிறாரோ அவர்களது வாழ்வை கொஞ்சம் கவனித்து பார்த்தால் தெரியும் அவர்கள் தான் மிகவும் மோசமான நிலையில் பல்வேறு பிரச்சினைகளை சமாளித்து கொண்டு இருப்பவராக இருப்பார்கள்.
- மனிதர்களாகிய நாம் பெரும்பாலும் நமது உடல் சோர்வு அடைந்து இருக்கும்போது பெரும்பாலும் நமது உண்மையை பேசவும் உண்மையான உணர்வுகளையும் வெளிப்படுத்துவோம் என்று உளவியல் ஆய்வுகள் கூறுகின்றன. அதனால் தான் பெரும்பாலும் செய்த தவறுக்கு மனிப்பு கேட்பவர்கள் கூட மாலை பொழுது சென்ற பிறகு கேட்பார்கள் அடுத்த முறை யாரேனும் மனம் திறந்து பேசும்போது அல்லது மனிப்பு கேட்கும்போது கவனித்து பாருங்கள்.
- பெரும்பாலும் நாம் அனைவரும் நமது உருவம் போல் சாயலில் இருக்கும் நபர்களை கண்டு அதிகம் ஈர்க்க படுகிறோம்.
- யார் ஒருவர் கெட்ட எண்ணங்கள் இல்லாத நல்ல நண்பர்கள் வட்டாரத்தில் இருக்கிறாரோ அவர் மன அழுத்தம் இல்லாத ஒருவராக இருப்பார் என்று அறிவியல் ஆராய்ச்சிகள் மூலம் உறுதி படுத்த பட்டுள்ளது .
- மனிதர்களுக்கும் எரும்புகளுக்கும் நிறைய குணாதிசயங்கள் ஒன்றாக உள்ளனவாம். அதே போல் தான் மனிதர்களுக்கும் தெனிக்களுக்கும் என்று கூறப்படுகிறது.
- தினமும் காலையில் குளிர்ந்த நீரில் குளிப்பதால் உங்களுக்கு சுய ஒழுக்கம் இயல்பாகவே பின்பற்ற எளிமையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
- நமது மூளை இரவு நேரங்களில் மிகவும் புத்துணர்ச்சி உடன் வேலை செய்யுமாம், இனி எதாவது உங்களது வாழ்வில் முக்கியமான விஷயம் செய்ய வேண்டும் என்றால் இரவு நேரங்களில் செய்து பாருங்கள். அதே போல் மதியம் நேரங்களில் நமது மூளை மற்ற நேரங்களை காட்டிலும் மந்தமாக வேலை செய்யுமாம், எனவே அந்த நேரங்களில் மூளைக்கு அதிக வேலை பழுக்களை கொடுக்காதீர்கள்.
- ஒரு மனிதரிடம் சண்டை செய்யும் போது அதாவது வாதாடும் போது தயவு செய்து அறிவு பூர்வமாக சிந்தித்து செயல் படாதீர்கள் அவர்கள் மனிதர்கள் என்பதை மனதில் வைத்து உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் வாதாடுங்கள்.