நம்மில் பெரும்பாலும் அனைவருக்கும் இந்த ஒரு கேள்வி இருந்து கொண்டே இருக்கும். சிறு வயதில் எப்படி அவ்வளவு கடினமான கணிதம், அறிவியல், வேதியல் இயற்பியல் போன்ற அனைத்தையும் படித்தோம் மனதில் பதிய வைத்து தேர்வுகளிலும் வெற்றி பெற்றோம் இப்போது நமது மூளை ஒருவரின் கை பேசி எண்களை கூட பதிய வைக்க முடியவில்லை என்ற எண்ணம் கண்டிப்பாக தோன்றி இருக்கும். அப்படி நீங்களும் சிந்திக்கிறீர்கள் என்றால் இந்த பதிவு உங்களுக்காக தான்.
நமது மூளையின் நினைவாற்றல் குறைந்து போனதற்கு மிக முக்கிய காரணம் நம் உணவு முறை மாற்றமும் அதிகமாக கை பேசி பயன் படுத்துவதும் தான். காலையில் எழுந்தது முதல் இரவு தூங்கும் வரை கை பேசியில் எதையாவது பார்த்துக் கொண்டே இருக்கிறோம். ஷார்ட்ஸ், ரீல்ஸ் போன்ற குறும் காணொளிகள் நமது மூளையை வேலை செய்வதை குறைத்து விடுகிறது. இதனால் தான் நம்மால் முன் போல் பெரிதாக எதையும் நினைவில் வைத்திருக்க முடியவில்லை.
ஒரு மகி்ச்சியான செய்தி என்னவென்றால் நம்மால் நமது மூளை பயன்பாட்டை முன் மாதிரி அதிகரிக்க வைக்க முடியும். அதற்கு சில விஷயங்கள் நாம் செய்ய வேண்டும் அவற்றை நம் வாழ்க்கை முறையாகவும் மாற்ற வேண்டும். அவைகள் என்ன என்பதை நான் இந்த பதிவில் எழுதி உள்ளேன். படித்து தெரிந்து கொள்ளுங்கள் .
- காலையில் நாம் அனைவரும் எழுந்த உடன் செய்யும் முதல் தவறு கை பேசியை எடுத்து பயன் படுத்த தொடங்குவது தான். நாம் என்னவோ ஒரு 5 நிமிடம் பயன் படித்து விட்டு வைத்து விடுவோம் என்று நினைப்போம் ஆனால் இறுதியில் குறைந்தது 30 நிமிடம் ஆவது பயன் படுத்துவோம். இவ்வாறு செய்வது நமது மூளை செயல்ப்பாட்டை நிச்சயமாக குறைத்து விடுகிறது. அதனால் முதலில் கை பேசி எடுப்பதை கை விட வேண்டும்.
- தினமும் காலை 30 நிமிடம் நடைப் பயிற்சி அல்லது மிதி வண்டி ஓட்டுவது மூளைக்கு புத்துணர்ச்சி அளிக்கும் என்று மூளை மற்றும் நரம்பியல் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
- காலை நேரத்தில் சுடு நீரில் குளிப்பதை தவிர்த்து குளிர்ந்த நீரில் குளிப்பதால் மூளை பயன்பாட்டை அதிகரிக்க முடியம் அது மடடுமில்லாமல் அவ்வாறு செய்வது அந்த நாளையே சுறு சுறுப்பாக வைத்திருக்கும்.
- ஓய்வு நேரம் கிடைக்கும் பொழுது செஸ் விளையாட்டு விளையாடுவதை பழக்கமாக வைத்து கொள்ளுங்கள் . நண்பர்கள் யாரும் உடன் இல்லாதவர்கள் கணினி உடனாவது விளையாட முயற்ச்சி செய்யுங்கள்.
- கை பேசியில் காணொளி காண்பதை குறைத்து விட்டு அதிகம் புத்தகங்கள் படிப்பதை பழக்கமாக மாற்றுங்கள்.
- உங்களை விட வயதில் குறைந்தவர்களுடன் நிறைய உரையாடுங்கள் ஏனென்றால் அவர்களுக்கு அறிவார்ந்த சிந்தனைகள் எழுவது நம்மை காட்டிலும் அதிகமாக இருக்கும்.
- உங்களது கை பேசியில் உள்ள தொலை பேசி எண்களை மனப்பாடம் செய்து பழகுங்கள். உங்களது நண்பர்களின் எண்களை மனப்பாடம் செய்து கொள்ளுங்கள். இது போன்று செய்வதால் நம் மூளை மீண்டும் நினைவாற்றலை அதிகரிக்கும்.
- உங்கள் மனதை அமைதியாக வைத்து கொள்ள முயற்சி செய்யுங்கள். இன்று இருக்கும் சூழ்நிலையில் இது கடினமான ஒன்று தான் ஆனால் முடியாத ஒன்றில்லை. தினமும் தியானம் செய்ய பழகினால் கொஞ்ச கொஞ்சமாக நமது மனது அமைதி ஆகி விடும்.
- வெளியில் செல்லும் போது புதிய நபர்களுடன் உரையாட முயற்ச்சி செய்யுங்கள். அவர்களது பெயர்கள் மற்றும் அவர்களது தகவல்களை நினைவில் வைத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். இது உங்கள் நியாபக சக்தியை அதிகரிக்கும்.
- ஒவ்வொரு ஆண்டும் புதிய ஒரு மொழியை கற்று கொள்ள முயற்சி செய்து பாருங்கள்.
- அதே போல் புதிய புதிய விளையாட்டுகளை கற்று கொள்ள முயன்று பாருங்கள். இது போல் புதிய விஷயங்களை முயற்சி செய்யும் போது நமது மூளை சுறு சுறுப்பாக செயல் பட ஆரம்பிக்கிறது.
- புதிய இசை கருவிகள் இசைக்க கற்று கொள்ளு்கள். நல்ல இசை நமது மனதை அமைதி படுத்தி மூளையை சுறசுறுப்பாக மாற்றுகிறது.
- இரவு நேரத்தில் தூங்குவதற்க்கு ஒரு மணி நேரததிற்கு முன்பே கை பேசி பயன்படுத்துவதை நிறுத்தி விடுங்கள்.
- ஒரு நாளைக்கு தேவையான உணவை உட்கொள்ள மறக்காதீர்கள். நல்ல உணவு நம் அனைத்து பிரச்சினைகளுக்கும் மருந்து என்பதை மறந்து விடாதீர்கள்.
இந்த பதிவில் உள்ள அனைத்தும் நான் படித்து தெரிந்து கொண்டவைகள். இவை அனைத்தையும் நான் பயன் படுத்தி பார்க்கிறேன். நீங்களும் இவை அனைத்தயும் பயன் படுத்தி எதாவது மாற்றம் நீங்கள் உணர்ந்து உள்ளீர்களா என்பதை கமென்ட் இல் தெரிவியுங்கள்.