Types of tea in tamil

தேநீர் நம் வாழ்வில் மிகவும் அத்தியாவசிய ஒன்றாக உள்ளது. காலை, மாலை என இரு வேளை அதை அறுந்துவோர் இங்கு அதிகம். கணக்கில்லாமல் தேநீர் பருகுவோரும் இங்கு ஏராளம். நாம் அருந்துவது பெரும்பாலும் பால் மற்றும் சர்க்கரை சேர்த்து தேநீர். ஆனால் தேநீர் பல்வேறு வகைகளில் உள்ளது. தேநீர் வகைகள் பற்றிய தகவல்களை இந்த பதிவில் பார்க்க உள்ளோம். முழு தகவல்களை தெரிந்து கொள்ள முழு பதிவயும் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

தேயிலை பொடி எந்த இடத்தில் இருந்து தயாரிக்க படுகின்றது என்ற அடிப்படையில் முக்கியமான 6 வகைகள் உள்ளன.

  • ஜப்பான் டீ
  • சீன டீ
  • ஃபார்மோச டீ
  • டார்ஜீலிங் டீ
  • சிலோன் டீ
  • அஸ்ஸாம் டீ

எந்த இடத்தில் தேயிலைகள் பயிர் செய்ய படுகின்றது என்ற அடிப்படையில் இந்த ஆறு வகைகள் தனித்துவம் வாய்ந்ததாக உள்ளது. அந்த அந்த இடத்திற்கு ஏற்றவாறு அதன் தனித்துவம் உள்ளது.

பல்வேறுபட்ட தேநீர் வகைகள் உள்ளன. பொதுவாக மிகவும் பிரபலமாக 6 வகைகள் உள்ளன. அதில் இருந்தே மற்ற வகை தேநீர் வகைகள் தயாரிக்க படுகின்றது.

  • வெள்ளை தேநீர் (White tea)
  • பச்சை தேநீர் (green tea)
  • மஞ்சள் தேநீர் (yellow tea)
  • கருப்பு தேநீர் (black tea)
  • ஊலாங் தேநீர்
  • பு – எர் தேநீர்

வெள்ளை தேநீர் (White tea)

மற்ற எல்லா வகை தேநீர்களை விட இது தான் மிகவும் விலை உயர்ந்த ஒன்றாக உள்ளது. இது சீனாவில் ஃபூஜியன் என்ற இடத்தில் உற்பத்தி செய்ய படுகிறது. மற்ற நாடுகளில் இது எளிதில் கிடைப்பதில்லை. கேமிலியா சினேன்சீஸ் தாவரத்தின் மொட்டுகள் இல் இருந்து தயாரிக்க படுகின்றது. அந்த மொட்டுகளை சுற்றி வெள்ளை முடி இருப்பதால் இதனை வெள்ளை தேநீர் (White tea) என்று அழைக்க படுகின்றது. இதனை லேசாக வறுத்து அதனை காய வைத்து தயாரிக்க படுகின்றது. இந்த வகை தேநீர் புற்று நோயில் இருந்து பாதுகாப்பதாக கூறப்படுகிறது.

பச்சை தேநீர் (Green tea)

இந்த வகை தேநீர் சீனா, ஜப்பான், கொரியா நாடுகளில் மிகவும் பிரபலமான ஒன்றாக உள்ளது. இது குறைவாக ஆக்சிஜனேற்றம் செய்யப் படும் ஒன்றாகும். இதை பத படுத்தாமல் பச்சையாக விற்பனை செய்கின்றனர். இந்த டீ வகை நீரின் கொதி நிலை விட குறைந்த வெப்ப நிலையில் தயார் செய்ய வேண்டும், இல்லையெனில் மிகவும் கசப்பு தன்மை கொண்டது. கிரீன் டீ உடல் பருமனை குறைக்க முடியும் என்று நம்ப படுகிறது.

மஞ்சள் தேநீர் (Yellow tea)

இது சீனாவில் மட்டும் தயாரிக்க படுகின்ற தனித்துவம் வாய்ந்த ஒரு வகை தேநீர் வகை ஆகும். கிரீன் டீ போலவே தான் இதையும் தயார் செய்கின்றனர். கொஞ்சம் வித்தியாசமாக இதனை நீராவியில் வேக வைத்து பின்னர் மெதுவாக காய வைத்து தயாரிக்க படுகின்றது. இதனையும் குறைந்த வெப்ப நிலையில் தயார் செய்ய பட வேண்டும்.இதனை அருந்துவதால் மூட்டு வலி மற்றும் கல்லீரல் நோய்கள் வராமல் தடுக்க படுகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன.

கருப்பு தேநீர் (black tea)

இந்த வகை தேநீர் தான் நாம் அன்றாடம் அருந்தும் தேநீர்.இது மிகவும் வாசனை நிறைந்த ஒன்றாக உள்ளது. இதனோடு எலுமிச்சை சாறு அல்லது பால் சேர்த்து அருந்துகின்றனர்.மற்ற தேநீர் வகைகளை விட இந்த வகை தேநீர் ல் தான் காபின் அதிக அளவில் உள்ளது .

ஊலாங் தேநீர்

இது சீனாவின் பாரம்பரிய தேநீர் வகை ஆகும். கேமில்லிய சினேன்சிஸ் இலைகளை சூரிய ஒளியில் நன்றாகஉலற வைத்து இந்த வகை தேநீர் பொடி தயாரிக்க படுகின்றது.இதில் காபின் மிகவும் குறைவாகும். இதில் பல்வேறு வகை தேநீர் உள்ளது. இதனை அருந்துவதால் இதய நோய்,புற்று நோய், சர்க்கரை நோய், மன அழுத்தம் போன்ற நோய்களில் இருந்து நம்மை காத்து கொள்ள முடியும்.

பு – எர் தேநீர்

இது ஒரு வகையான சீன தேநீர் வகை ஆகும்.மற்ற தேநீர் வகைகளை விட அதிக கசப்பு தன்மை கொண்ட ஒன்றாக உள்ளது. நூறு ஆண்டுகளுக்கு மேலாக பழமையான ஒரு வகை தேநீர் ஆகும். சீனாவில் மட்டும் தயாரிக்க படுகின்ற ஒரு வகையாக உள்ளது. இதில் காபின் உள்ளது இதில் இருந்து தயாரிக்க படும் எல்லா வகை தேநீரிலும் காபின் உள்ளது. இது உடல் எடை குறைக்க பயன் படுவதாக கூறப் படுகின்றது. இதனை அருந்துவதால் இதய நோய் வராமல் தடுக்க முடியும் என்று நம்ப படுகின்றது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *