Facts about tea in tamil

டீ வரலாறு

டீ நம் வாழ்வில் அத்தியாவசியமான ஒன்றாக மாறி விட்டது. இதனை தமிழில் தேநீர் என்று அழைக்கிறார்கள்.4700 வருடங்களுக்கு முன்னர் சீனா வில் முதன் முதலில் டீ கண்டு பிடிக்க பட்டது.யாரோ ஒருவர் வெந்நீர் கொதிக்க வைத்து கொண்டிருந்த போது, தற்செயலாக தேநீர் இலை விழுந்து நீரின் நிறம் மாறியதாக கூறப்படுகிறது. ஆரம்ப காலத்தில் தேயிலை வெறும் மருத்துவ தேவைகளுக்கு மட்டுமே பயன் படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. அதன் பின்னர் பல வருடங்களாக 18 வது நூற்றாண்டு வரை சீனர்கள் மட்டும் இதனை பயன் படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இந்தியாவில் முதன் முதலில் 19 ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் நாட் தேநீர் அறிமுகம் செய்ய பட்டது. அசாம், டார்ஜீலிங் மற்றும் நீலகிரியில் முதன் முதலில் தேயிலை பயிர் செய்ய பட்டது.

தேநீர் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்

  • தண்ணீர்க்கு அடுத்து தேநீர் தான் அதிகம் அருந்த படுகிறது உலகம் முழுவதும்.
  • இந்தியா மற்றும் சீனாவின் மிகவும் விருப்பமான பானமாக தேநீர் உள்ளது. விரும்பி அருந்துவது மட்டும் அல்லாமல் இந்தியா மற்றும் சீனாவில் தான் தேயிலை அதிகமா உற்பத்தி செய்ய படுகிறது.
  • ஈரான், துருக்கி, எகிப்த், மொரோக்கோ போன்ற நாடுகளின் தேசிய பானமாக தேநீர் உள்ளது.
  • உலகம் முழுவதும் ஒரு நாளைக்கு 3 மில்லியன் கப் தேநீர் அருந்த படுகிறது.
  • தேநீர் பாதுகாப்பான ஒன்று என்று உலக அளவில் நம்ப படுகிறது. தேநீர் குடிப்பதனால் நடுக்குவாதம் மற்றும் இதயம் தொடர்பான நோய்கள் தடுக்க படுகிறது.
  • திபெத் நாட்டில் தேநீர் உடன் உப்பு மற்றும் வெண்ணெய் சேர்த்து அருந்துகின்றனர்.
  • உலகிலேயே துருக்கி நாட்டு மக்கள் தான் அதிக அளவில் தேநீர் பருகுகின்றனர்.
  • தேநீரை வட இந்தியர்கள் மற்றும் பல்வேறு நாடினார்கள் சாய் என்று கூறுகிறார்கள் இந்த வார்த்தை சீனா வில் இருந்து வந்துள்ளது.11 நாடுகளில் தேநீரை சாய் என்று தான் அழைக்கிறார்கள்.
  • ஐரோப்பிய நாட்டில் முதலில் தேயிலை கண்டறிந்த பொழுது அதனை எதற்கு பயன் படுத்துவார்கள் என்று தெரியாமல் ஒரு பெரிய ஆடம்பர உணவகத்தில் தேயிலை வைத்து சாலட் செய்து விருந்தினர்களுக்கு கொடுத்துள்ளார்கள் அதனையும் விரும்பி சாப்பிட்டனராம்.
  • 19 வது நூற்றாண்டில் தேநீர் மிகவும் பிரபலமாக எல்லா நாடுகளிலும் இருந்து வந்துள்ளது. பெரிய மீசை வைத்தவர்கள் தேநீர் குடிக்க சிரம படுவார்கள் என்று ஹாரி ஆடம்ஸ் என்பவர் பட்டாம்பூச்சி அமைப்பு கொண்ட கோப்பை ஒன்றை உருவாக்கினார்.அது அப்போது மிகவும் பிரபலமாக இருந்தது . பின்னர் 20 வாது நூற்றாண்டில் அதன் பயன் பாட்டை இழந்தது.
  • தேயிலை பை (tea bag) 1904 வது வருடம் தாமஸ் சல்லிவன் என்பவர் உருவாக்கினார்.
  • சீனர்கள் பெரும்பாலும் பால் மற்றும் சர்க்கரை தேநீர் செய்ய பயன்படுத்துவதில்லை. தேயிலை பைகளையும் பயன்படுத்துவதில்லை.
  • தேநீர் செய்ய kettle எனப்படும் பாத்திரம் இல்லாமல் இங்கிலாந்தில் ஒரு வீடும் இல்லையாம்.
  • கொசு தொல்லை இல்லாமல் இருக்க தேயிலை தண்ணீரை தெளித்து வைத்தால் கொசு தொல்லை இருக்காது.
  • ஒவ்வொரு வருடமும் 3 மில்லியன் டன் தேயிலை உற்பத்தி செய்ய படுகிறது.
  • ஒரு பவுண்ட் தேயிலை பொடி தயாரிக்க 2000 தேயிலைகள் தேவை படுகிறது.
  • அமெரிக்காவில் 1904 வாது வருடம் ஐஸ் டீ பயன் படுத்த தொடங்கினர்.
  • அமெரிக்கர்கள் பிளாக் டீ என்று கூறுவதை சீனர்கள் ரெட் டீ என்று கூறுகின்றனர்.

தேநீரில் உள்ள நன்மைகள்

  • இதில் அதிக அளவு இயற்கையான ஆண்டி ஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளது.
  • விட்டமின் B2,B1 மற்றும் B6 நிறைந்துள்ளது.
  • பொட்டாசியம், மாங்கனீஸ், போலிக் ஆசிட் மற்றும் கால்சியம் சத்துககள் அதிகமா உள்ளது.

மற்ற பயன்கள்

  • சேவிங் செய்யும் போது ஏற்படும் சிறிய வெட்டுகளுக்கு மருந்தாக பயன்படுகிறது.
  • துறு நாற்றதில் இருந்து காத்து கொள்ள தேயிலை தண்ணீர்ப் பயன் படுத்த படுகிறது.
  • ரோஜா பூ செடிகளுக்கு சிறந்த உரம் தேயிலை.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *