பெரும்பாலும் காலை மற்றும் மாலை தேநீர் குடிப்பது என்பது எல்லோர் வாழ்விலும் பொதுவான விசயமாக உள்ளது இது மிகவும் குறைவாக நான் கூறுவது. கணகின்றியும் நம்மில் பலர் தேநீர் குடிக்கிறோம். இவ்வாறு தேநீர் குடிப்பதால் ஏற்படும் தீமைகள் பற்றி நம்மில் பலருக்கு தெரிவதில்லை. தேநீர் குடிப்பதால் தீமை ஏற்படுவதில்லை. அளவுக்கு அதிகமான அளவு தேநீர் எடுத்து கொள்வது நமது உடலில் பல்வேறு விதமான பிரச்சினைகளை உருவாக்குகிறது.
அளவுக்கு அதிகமாக தேநீர் குடிப்பதால் ஏற்படும் தீமைகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த பதிவை தொடர்ந்து படியுங்கள்.
- அதிகமான அளவு தேநீர் குடிப்பதால் கவன சிதறல் ஏற்படுகிறது. நீங்கள் எவ்வளவு முயற்சி செய்தாலும் உங்களது கவனம் அலை பாய்ந்து கொண்டே இருக்கிறது என்றால், நீங்கள் தினமும் எவ்வளவு டீ பருகுகிரீர்கள் என்று கவனியுங்கள், அதிக தேநீர் அதிக கவன சிதறல் ஏற்பட காரணமாக உள்ளது.
- தூக்கம் இல்லாமல் அவதி படுவது மற்றும் எப்பொதும் மனம் அமைதி இல்லாமல் இருப்பற்கு அதிக அளவில் ஆன தேநீர் முக்கிய காரணமாக உள்ளது.
- நமது உடலுக்கு இரும்பு சத்து மிகவும் அவசியமான ஒன்றாகும். அதிக அளவில் தேநீர் குடிப்பதால் அதில் உள்ள டானிஸ் என்ற வேதிப்பொருள் நமது உடலில் இரும்பு சத்து சேராமல் தடுக்கிறது. இதனால் நமது உடலில் இரும்பு சத்து குறைந்து அனீமியா நோயை ஏற்படுத்துகிறது.
- வயதானர்வகள் பெரும்பாலும் சொல்வது மூட்டு வலி என்று தான். அந்த மூட்டு வலி ஏற்பட மிக முக்கியமான காரணம் அதிக அளவிலான தேநீர். தேநீர் சரியான அளவில் எடுத்து கொண்டால் எலும்புகளை பலப்படுத்தும் அதுவே அளவுக்கு அதிகமானால் மூட்டு வலிகள் ஏற்பட காரணமாக அமையும். 40% மூட்டு வலி ஏற்பட காரணமாக இருப்பது அளவுக்கு அதிகமான தேநீர் தான். இளம் வயதில் மூட்டு வலி ஏற்படுவதும் இதனால் தான்.
- அளவுக்கு அதிகமான தேநீர் எடுத்து கொள்வது புற்றுநோய் உண்டாக்கும் என்றால் நம்ப முடிகிறதா. ஆம், உணவு குழாய் புற்றுநோய் ஏற்பட முக்கியமான காரணம் அதிக அளவிலான தேநீர் ஆகும்.
- புற்றுநோய் மட்டும் அல்லாமல் புற்றுநோய் சிகிச்சைக்கு அளிக்கப்படும் கீமோ தெரபி வேலை செய்யாது நீங்கள் அதிக அளவில் தேநீர் எடுத்து கொண்டால்.
- நம் அனைருக்கும் ஏற்படும் பற் சிதைவு நோய் ஏற்பட மிக முக்கியமான காரணம் அதிக அளவிலான தேநீர் ஆகும்.
- அளவுக்கு அதிகமான தேநீர் உடல் நடுக்கம் ஏற்படுவதற்கு மிக முக்கியமான காரணமாக உள்ளது.
- நமது உடலில் அமில பிரச்சினை ஏற்பட தேநீர் தான் காரணம். அதிக அளவிலான தேநீர் உடலில் அதிக அளவிலான அமிலத்தை சுரக்க செய்து வயிற்று எரிச்சலை உண்டாக்குகிறது.
- அதிக அளவில் ஆன தேநீர் மூளை செயல் பாட்டை தடுத்து மூளையை மழுங்க செய்கிறது.
- தேநீர் ல் உள்ள அதிக அளவிலான காபின் தலை வலியை ஏற்படுத்துகிறது. நமக்கு ஏற்படும் அதிக அளவிலான தலை வலிக்கு தேநீர் தான் காரணம்.
உணவாக இருந்தாலும் மருந்தாக இருந்தாலும் அளவுக்கு அதிகமாக எடுத்து கொண்டால் அதுவே பெரிய அளவிலான பிரச்சினை ஏற்பட காரணமாக அமையும். அளவோடு தேநீர் எடுத்து கொண்டால் உடலுக்கு புத்துணர்ச்சி மற்றும் பல்வேறு நன்மைகள் ஏற்படுத்தும் ஆனால் அளவுக்கு அதிகமாக போகும் போது அது உயிரையே பறிக்க கூடிய அளவிற்கு தீங்காக மாறும்.