வண்ணங்கள் என்றாலே நம் மனதில் ஆயிரம் எண்ணங்கள் தோன்றும். பிடித்த நிறம் , பிடித்த நிறத்தில் எடுத்த உடை, பிடித்த நிறத்தில் வாங்கிய பொருட்கள் என்று பல்வறு எண்ணங்கள் தோன்றும். உங்களுக்கு பிடித்த நிறத்தை வைத்து நீங்கள எப்படி பட்டவர் என்று கூற முடியும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா. ஒவவொரு வண்ணங்களும் அதனை விரும்புவோர் பற்றிய உளவியல் உண்மைகளும் இந்த பதிவில் படிக்க இருக்கிறீர்கள். படித்து உங்கள் விருப்ப வண்ணங்கள் பற்றி உளவிலாளர்கள் கூறுவது உண்மை தானா என்று தெரிந்து கொள்ளுங்கள்.
மஞ்சள்
மஞ்சள் நிறத்தை விருப்பமாக கொண்டவர்கள் நீங்களா, அந்த நிறத்தை பற்றி கூறிய தகவல்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
புதிதாக ஒரு விசயத்தை கற்று கொள்ள மிகவும் ஆர்வத்துடன் இருப்பவர்கள் நீங்கள். உங்களது அறிவு திறனை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள விருப்பம் கொள்வீர்கள். தனித்துவம் மிக்க ஒருவராக நிச்சயம் நீங்கள் இருப்பீர்கள்.
பச்சை
பச்சை நிறத்தை பிடித்த நிறமாக கொண்டிருந்தாள் நீங்கள் நிச்சயாக மற்றவர்கள் மீது உண்மையான அக்கறை கொண்டவர்கள். பிறரோடு உண்மையாக இருப்பீர்கள் மற்றும் வெளிப்படையாக பேச விரும்புவர் நீங்கள்.
ஊதா
உங்களுக்கு பிடித்த நிறம் ஊதா என்றால் , நீங்கள் நிச்சயாக உங்கள் உள்ளுக்குள் நிறைய உண்மைகள் ரகசியங்கள் வைத்து இருப்பீர்கள்.உங்களை மற்றவர்கள் புரிந்து கொள்ள கொஞ்சம் அதிக காலம் எடுக்கும். தேவையான செயல்கள் செய்வதில் நேரம் செலவிட வேண்டும் என்று எண்ணுபவர்கள்.
பர்ப்பில்
நீங்கள் பர்ப்பில் நிற விரும்பியாக இருந்தால் உங்களுக்கு இயற்கை மிகவும் பிடித்த ஒன்றாக இருக்கும். எல்லா விஷயஙகளிலும் உங்கள் பார்வை தனித்துவம் வாய்ந்த ஒன்றாக இருக்கும் .
சிவப்பு
உங்களுக்கு பிடித்த நிறம் சிவப்பு என்றால் நீங்கள் மிகவும் துணிச்சலான ஒருவராக நிச்சயம் இருப்பீர்கள். உங்களை யாராலும் எளிதில் மனதஅளவில் கஷ்ட பட வைக்க முடியாது.எப்போதும் புத்துணர்வு கொண்ட ஒருவராக இருப்பீர்கள்.
வெள்ளை
வெள்ளை நிறத்தை விருப்பமான நிறமாக கொண்ட நபராக நீங்கள் இருந்தால், நீங்கள் எளிமையை அதிகம் விரும்ப கூடிய ஒருவராக இருப்பீர்கள். அமைதி மற்றும் நிம்மதியை விரும்புவீர்கள்.
பிங்க்
உங்களுக்கு பிங்க் நிறம் பிடிக்கும் என்றால் நீங்கள் மனதலவில் மிகவும் அமைதி நிறைந்த ஒருவராக இருப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை கொண்ட ஒருவராக நிச்சயம் இருப்பீர்கள்.
கருப்பு
நீங்கள் கருப்பு நிறம் விரும்புபவர் என்றால் நிச்சயம் உங்கள் எண்ணங்கள் வண்ணங்கள் நிறைந்த ஒன்றாக இருக்கும். ஆளுமை தன்மை அதிகம் கொண்ட ஒருவராக இருப்பீர்கள். குறிக்கோளுடன் இருக்கும் நபராக இருப்பீர்கள்.
மெரூன்
மெரூன் உங்கள் விருப்ப நிறமாக இருந்தால் நீங்கள் மனது அளவில் திடமான ஒருவராக நிச்சயம் இருப்பீர்கள். மற்றவர்களை அதிக அளவில் ஈர்க்கும் ஒருவராக நீங்கள் இருப்பீர்கள்.
பிரவுன்
மிகவும் தீவிரமான எண்ணங்கள் கொண்ட நபர்கள் பிரவுன் வண்ணத்தை அதிகம் விரும்பும் நபர்கள். பிறரை அதிக அளவில் பிடித்த செயல்களை செய்ய ஊகுவிப்பதில் இவர்கள் பெரும் பங்கு அளிக்கும் நபர்களாக இருக்கிறார்கள்.
உலக அளவில் அதிகமாக எந்த வண்ணங்கள் விரும்புகிறார்கள் என்ற புள்ளி விவரம் கீழே குறிப்பிட்டுள்ளேன். உங்களுக்கு பிடித்த நிறத்தை எவ்வளவு சதவீதம் மக்கள் விரும்புகீறார்கள் என்று பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
- ஊதா – 42%
- பச்சை – 14%
- பர்ப்பில்- 14%
- சிவப்பு – 8%
- கருப்பு – 7%
- ஆரஞ்சு – 5%
- மஞ்சள் – 3%
- பிரவுன் – 3%
- கிரே – 2%
- வெள்ளை – 2%