நீரின்றி அமையாது உலகு, இந்த திருக்குறள் நாம் எல்லோரும் அறிந்த ஒன்றே. நீரின்றி நிச்சயம் இந்த உலகு அமையாது,இந்த உலகமே இல்லை என்றால் நாம் எவ்வாறு இருப்போம். நீர் நாம் அனைவருக்கும் மிக மிக முக்கியமான ஒன்றாகும். இந்த உலகம் 71% நீரால் உருவாகி இருந்தாலும் அத்துணை அளவு நீரும் நாம் பயன்படுத்துவதில்லை. நீர் இல்லாமல் எவ்வளவு மக்கள் கஷ்ட படுகிறார்கள், இவை அனைத்தும் நாம் அறிந்தவயே. நீரை பற்றி நாம் அனைவரும் அறியாத பல்வேறு சுவாரஸ்யமான தகவல்கள் உள்ளது. அவை அனைத்தையும் உள்ளடக்கிய பதிவுதான் இது. மேலும் தகவல்கள் தெரிந்தது கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
- இந்த உலகம் முழுவதும் ஒரு பில்லியன் மக்கள் குடிப்பதற்கு பாதுகாப்பான தண்ணீர் இன்றி கஷ்ட படுகிறார்கள்.
- சாதாரண தண்ணீர் உறைகின்ற நேரத்தை விட மிகவும் விரைவாக சுடு தண்ணீர் உறைந்து விடும்.
- பொதுவாக ஒரு இளம் வயது கொண்ட ஒரு நபரின் உடலில் சராசரியாக 37 லிட்டர் தண்ணீர் நிறைந்து இருக்கிறது.
- மனித மூளை 75% நீரினால் உருவாக்க பட்டுள்ளது.
- மனித எலும்புகள் 25% நீரினால் உருவாக்க பட்டுள்ளது.
- மனித இரத்தத்தில் 83% நீர் நிரம்பி உள்ளது.
- நீரினது உறை நிலை 0 டிகிரி செல்சியஸ் ஆகும்.
- சுத்தமான தண்ணீர் எந்த வித நிறமோ அல்லது எந்த விதமான சுவையோ கொண்டிருக்காது.
- வெள்ளரிக்காய் மற்றும் ஜெல்லி மீன்கள் இரண்டும் 95% நீரினால் உருவாக்க பட்ட ஒன்றாகும் .
- 1 டன் இரும்பை உருவாக்க சராசரியாக 300 டன்கள் தண்ணீர் தேவை படுகிறது.
- ஒரு மனிதரால் உணவு இல்லாமல் எப்படியோ ஒரு மாதம் உயிர் வாழ்ந்திட முடியும், ஆனால் தண்ணீர் இல்லாமல் அதிக பட்சமாக ஒரு வார காலம் மட்டுமே தாக்கு பிடிக்க முடியும்.
- ஒரு நாளில் நாம் ஒவ்வொரு முறை மூச்சை வெளிவிடும்போதும் நம் உடலில் இருந்து 237 மில்லி லிட்டர் தண்ணீர் வெளியேறுகிறது.
- இன்றைய நிலையில் 400 மில்லியன் மக்கள் தண்ணீர் இல்லாமல் உலகம் முழுவதும் கஷ்ட படுகிறார்கள்.
- குளிர்ந்த நீரை விட சுடு நீர் அதிக அளவு எடையை கொண்டுள்ளது.
- எவரெஸ்ட் சிகரத்தில் தண்ணீரின் கொதி நிலை 71 டிகிரி செல்சியஸ் ஆகும்.
- நைகரா அருவி ஒரு நொடிக்கு 4000 பாத் டப்களை நிரப்ப முடியுமாம்.
- மழை நீரில் விட்டமின் B12 வகை சத்தானது அதிகம் நிறைந்து காணப்படுகிறது .
- ஒவ்வொரு நாளும் ட்ரில்லியன் டன்கள் தண்ணீர் கடல் பறப்பில் இருந்து ஆவியகிறது.
- ஒரு மனிதன் தன் வாழ் நாளில் தோராயமாக 60,566 லிட்டர் தண்ணீர் அருந்துவது தெரிய வந்துள்ளது.
- அன்னாசி பழத்தில் 80% அளவிற்கு நீர் நிறைந்து உள்ளது.
- தக்காளியில் 95 % நீர் அளவு நிறைந்து காணப்படுகிறது.
- ஒரு யானையின் உடல் 70% நீரினால் உருவாக்க பட்டுள்ளது.
- உங்களுக்கு காய்ச்சல் நோய் வந்தால் நீங்கள் நிறைய தண்ணீர் எடுத்து கொள்ள வேண்டும். தண்ணீர் அதிகம் எடுத்து கொள்வதால் உங்கள் உடல் வெப்ப நிலை சீராகிறது.
- இந்த உலகில் நோயால் பாதிக்கப்பட்ட பாதி மக்கள் தண்ணீர் தொடர்பான எதோ ஒரு பிரச்சினையின் காரணமாக மருத்துவ மனைக்கு செல்கின்றனர்.
சுத்தமான தண்ணீர் இல்லாமலும், சுத்தமாக குடிக்க தண்ணீர் இல்லாமலும் உலகில் எவ்வளவோ மக்கள் தினம் கஷ்ட படுகிறார்கள். நாம் இருக்கின்ற அருமை தெரியாமல் வீனடிகின்றோம். ஒரு நாளைக்கு தேவையான அளவு தண்ணீர் நிச்சயம் நாம் அனைவரும் எடுத்து கொள் வேண்டும். போதுமான அளவு தண்ணீர் அருந்தினால் உடலில் பெரும்பாலான நோய்கள் வராமல் நாம் தடுக்கலாம். தண்ணீர் என்றாலும் அளவுக்கு அதிகாக எடுத்து கொண்டால் அதுவும் பல்வேறு விதமான பிரச்சினைகளுக்கு வழி வகுக்கும். எனவே தேவை அறிந்து போதுமான அளவு தண்ணீர் எடுத்து கொண்டு ஆரோக்கியமான வாழ்கையை வழ தொடங்குங்கள்.