Psychological facts about Day dreamers in tamil.

பகல் கனவு என்பது பகலில் உறங்கும்போது வருவதை மட்டும் குறிப்பிடுவது அல்ல. நம் சுற்றி உள்ள அனைத்தையும் மறந்து நிகழ்ந்து கொண்டிருக்கும் அனைத்திலும் இருந்து தப்பித்து சிந்தனைகளில் மூழ்கி கிடப்பதை பகல் கனவு என்று பொருள்.அவ்வாறு பகல் கனவு காண்போர் செய்யும் செயல்களை வைத்து அவர்கள் குணாதிசயங்களை ஓரளவுக்கு கணிக்க முடியும். அவர்களை பற்றிய தகவல்களை தான் இந்த பதிவில் படிக்க இருக்கிறீர்கள்.

பொதுவாக இவ்வாறு சிந்தயில் மூழ்கி கிடப்பவர்கள் ஒன்று எதையாவது செய்து கொண்டு இருப்பார்கள் அல்லது எதுவுமே செய்யாமல் இருப்பார்கள். ஓவியம் போன்றவற்றை தீட்டி கொண்டிருப்பார்கள் முதல் வகையினர். நம்மில் பெரும்பலானோர் முதல் வகையை சேர்ந்தவர்கள் தான். இரண்டாவது வகையை சேர்ந்தவர்கள் சற்று குறைவு தான். இந்த இரண்டு வகையினர்களது குணாதிசயங்களை கீழே படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

  • அதிகமாக யார் ஒருவர் நட்சத்திரங்கள் அல்லது நிலா போன்றவற்றின் ஓவியத்தை சிந்தனையில் இருக்கும்போது வரைகிரார்களோ அவர்கள் எப்போதும் குறிக்கோளுடன் உள்ள ஒருவராக நிச்சயம் இருப்பார்.
  • பூக்கள் அல்லது இலைகளின் வரைபடம் அல்லது ஓவியத்தை நீங்கள் வரைபவராக இருந்தால், நீங்கள் நிச்சயாக பயண விரும்பியாக அல்லது புது புது சாகசங்கள் செய்ய விருப்பம் கொண்ட ஒருவாறாக இருப்பீர்கள்.
  • எந்த ஒரு உருவமோ அல்லது வடிவமைப்பு இல்லாமல் எதாவது கிறுக்கி கொண்டு அல்லது வரைந்து கொண்டு இருந்தால், அவர்கள் வாழ்வில் நடந்த எதோ ஒரு சரி செய்ய முடியாத ஒரு பிரச்சினையை நினைத்து வருந்தி கொண்டு இருக்கிறாரகள் என்று பொருள்.
  • சிறு சிறு வட்டங்கள் வரைந்து அதில் பேனா அல்லது பென்சில் கொண்டு முழுவதும் கிறுக்கி கொண்டு இருந்தார்கள் என்றால் அவர்கள் தன் வாழ்வில் ஒரு முடிவு எடுப்பதில் திறமை வாய்ந்த ஒருவராக நிச்சயம் இருப்பார்.
  • புத்தகங்களில் உள்ள எழுத்துக்களை பேனா கொண்டு நிரப்பி கொண்டு இருந்தார்கள் என்றால் அவர்கள் மிகவும் குழப்பமான மன நிலையில் உள்ளர்கள் அல்லது எதோ ஒரு முடிவு எடுக்க முடியாமல் கஷ்ட படுகிறார்கள் என்று அர்த்தம்.
  • ஒருவர் தான் சிந்தனையில் இருக்கும்போது இதய வடிவ படம் வரைந்தால் அவர்கள் மிகவும் கருணை உள்ளம் கொண்ட ஒருவராக நிச்சயம் இருப்பார்.
  • எந்த படமும் வரையாமல் தங்களது பெயரையோ அல்லது கையெழுத்தை தொடர்ந்து எழுதி கொண்டுஇருந்தார்கள் என்றால் அவர்கள் புகழை விரும்புபவர்கள் அல்லது வாழ்வில் பெரிய நிலையை அடைய விரும்புகிறார்கள் என்று அர்த்தம்.
  • ஆழ்ந்த சிந்தனையில் இருக்கும்போது மனித முகங்களை அதிகமாக வரையும் ஒருவராக இருந்தால் அவர் அழகுக்கு அதிக முக்கயத்துவம் கொடுக்கும் ஒருவராக இருப்பார்.
  • பென்சில் கொண்டு வரையாமல் வண்ணங்கள் கொண்டு ஓவியம் தீட் டுபவராக இருந்தால் அழகான நினைவுகளில் அல்லது ஆழ்ந்த சிந்தையில் மூழ்கி இருக்கிறார்கள் என்று பொருள்.
  • பென்சில் அல்லது தூரிகயை தொடர்ந்து ஆட்டி கொண்டு இருந்தார்கள் என்றால் அவர்கள் அவசரமாய் எதோ முடிவு எடுக்க சிந்தனை செய்து கொண்டு இருக்கிறாரகள் என்று அர்த்தம்.
  • இரண்டாவது வகையை சேர்ந்தவர்கள் அதாவது எந்த ஒரு செயலும் செய்யாமல் சிந்தனையில் மூழ்கி கிடப்பவர்கள் மிகவும் ஆபத்து வாய்ந்த ஒருவராக அல்லது மிகவும் ஆழ்ந்து சிந்திக்கும் திறன் கொண்ட ஒருவராக கருத படுகின்றனர்.

ஆழ்ந்த சிந்தனையில் இருப்பதால் ஏற்படும் நன்மைகள்

  • இது போல பகல் கனவு அல்லது ஆழ்ந்த சிந்தனையில் நாம் இருக்கும்போது நமது மன அழுத்தம் மற்றும் மன சோர்வு சற்று குறைவதாக ஆய்வில் தகவல் அறிய பட்டுள்ளது.நமது மூளை புத்துணர்ச்சி பெறுகிறது உண்மை வாழ்கையில் இருந்து சிறிது நேரம் இடைவெளி கிடைப்பதால் நமது மனம் அமைதி கொள்கிறது.
  • முக்கியமான முடிவுகள் அல்லது கஷ்டமான முடிவுகள் எடுக்க சிறிது ஆழ்ந்த சிந்தனை அல்லது பகல் கனவு தேவையான ஒன்றாக உள்ளது.
  • சில நேரங்களில் இது போல ஆழ்ந்த சிந்தனைகளில் மூழ்கி கிடக்கும்போது தான் நாம் யார் நம் தேவைகள் என்ன என்பதை அறிய முடிகிறது. அதனால் இந்த ஆழ்ந்த சிந்தனைகள் மிகவும் அவசியமான ஒன்றாகும்.
  • இவ்வாறு பகல் கனவு காண்பதால் அல்லது ஆழ்ந்த சிந்தனையில் இருப்பதால் நமது கற்பனை திறன் அதிகரிக்கிறது.இது மிகவும் அவசியம் வாய்ந்ததாக இருக்கிறது.

தீமைகள்

இந்த உலகில் நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் எதிர் வினை என்று ஒன்று நிச்சயம் இருக்கும். நாம் இவ்வாறு எப்போதும் கனவுகளில் கற்பனை உலகில் இருப்பதால் நிஜ வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்று புரிந்து கொள்வது கடினமாக இருக்கும். ஒரு ஈடுபாடு இல்லாமல் வாழ்க்கை போய் விடும்.அது மட்டும் அல்லாமல் அவ்வாறு தொடர்ந்து இருப்பது நம் மூளையை மழுங்க செய்கிறது. எனவே அளவுக்கு அதிகமாக சிந்தனையில் இருப்பதும் மிகவும் ஆபத்தான ஒரு செயலாகும்.