கனவு நாம் அனைவர் வாழ்விலும் தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. பல்வேறு கனவுகள் அனைவர் தூங்கும்போதும் வருகிறது. அதற்கு பல்வேறு அர்த்தங்கள் உள்ளது. அதன் அர்த்தங்கள் மற்றும் கனவு பற்றிய சுவாரசியமான உண்மைகளை இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
- ஆண்களுக்கும் பெண்களுக்கும் வெவ்வெறு விதமான கனவுகள் வருகின்றது. ஆண்களுக்கு பெரும்பாலும் மிகவும் ஆக்ரோஷமான கனவுகள் வருகின்றன. பெண்களுக்கு மனதளவில் நெருக்கமான கனவுகள் வருகின்றன.
- வருங்காலத்தை பற்றிய கனவுகளை அதிகமாக உணர்ந்ததாக கூறுகின்றனர்.
- ஆண்களை விட பெண்களுக்கு தங்கள் கண்ட கனவுகள் அதிக நேரத்திற்கு நியபாகம் உள்ளதாக இருக்கிறது.
- கனவு கண்ட 15 நிமிடங்களில் 90% கனவுகள் மறந்து விடுகின்றன.
- நாம் காணும் பெரும்பாலான கனவுகளில் அதிகம் எதிர்மறை எண்ணங்கள் கொண்ட கனவுகளாக உள்ளன.
- கெட்ட கனவுகள் அதிகம் குழந்தைகளுக்கு தான் வருமாம்.
- 10 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு ஒரு நாளைக்கு 4 முதல் 6 கனவுகள் தோன்றுகின்றன.
- கனவில் யாரோ ஒருவரை நீங்கள் கொள்வது போல அல்லது உங்களை யாரோ ஒருவர் கொள்வது போல் கனவு வந்தால் நீங்கள் உங்கள் உள் மனதில் யாரோ ஒருவர் மேல் கோவமாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.
- கனவில் நீங்கள் இறந்து போவது போல் கண்டால் நீங்கள் மனதலவில் மிகவும் இறுக்கமாக இருக்கிறீர்கள் என்று பொருள்.அந்த கஷ்டத்தில் இருந்து உங்களை விடுவித்து கொள்வதற்காக நீங்கள் இறந்து போவது போல கனவு வருகிறது.
- அதிகஅறிவு திறன் உள்ளவர்களுக்கு அதிக அளவில் கனவு வருகிறது.
- பழைய புராணங்கள் படி கனவு என்பது நாம் முன் ஜென்மத்தில் செய்த செயல்களின் நினைவுகள் என்று கூறப்படுகிறது.
- வெறும் 6 நிமிடங்கள் மட்டும் உறங்கும் உறக்கம் உங்கள் அறிவு திறனை அதிகரிக்கும்.
- நாம் கானும் கனவுகளில் 80% வாழ்க்கை நமக்கு சொல்ல வரும் அல்லது நமது தொடர் எண்ணங்கள் சொல்ல வரும் ரகசிய செய்தி ஆகும்.
- பிறக்கும்போது பார்வை திறன் இருந்து பாதியில் பார்வை திறன் அற்றவர்கள் கூட உறங்கும்போது கனவு காண்கிறார்கள்.
- நாம் இதற்கு முன்னர் எங்கயோ அல்லது நமக்கு நன்கு பழகியவர்கள் மட்டுமே நமது கனவில் வருவார்கள்.
- விலங்குகளால் கூட கனவுகள் காண முடியும்.
- நீங்கள் குறட்டை விடும்போது உங்களால் கனவு காண முடியாது.
- குளிர் எந்த அளவுக்கு அதிகமாக உள்ளதோ அந்த அளவுக்கு மோசமான கனவுகளை நீங்கள் காண்பீர்கள்.
- உங்கள் வாழ்நாளில் மொத்தமாக 6 வருடங்கள் கனவு காண செலவழிக்கிறார்கள்.
- தாமதமாகதூங்கினால் பெரும்பாலும் கெட்ட கனவுகள் வருமாம்.
- 3 வயதுக்கு கீழ் உள்ள குழந்தகளுக்கு கனவுகள் வராது.
- ஒவ்வொரு கனவும் 10 முதல் 15 நிமிடங்கள் நீடிக்கின்றது.
- ஒரு வருடத்திற்கு குறைந்தது 1460 கனவுகள் நாம் அனைவரும் காண்கின்றோம்.
- கர்ப்பிணி பெண்களுக்கு மற்றவர்களை விட அதிக அளவு கனவினை நியாபாகம் வைத்து கொள்ளும் திறன் உள்ளது.
- நீங்கள் எங்கோ ஓடிகொண்டு உள்ளது போல் கனவு வந்தால் உங்கள் ஆழ் மனதில் எதோ பயம் உள்ளதாக அர்த்தம்.
- உங்கள் கனவில் நீங்கள் பறந்து கொண்டு இருப்பது போல் கனவு வந்தால் நீங்கள் சுதந்திரமாக வாழ விரும்புகிறீர்கள் என்று பொருள்.